நம் கோவிலின் சிறப்பு



நம் ஆலயம் சிவா ஆலயம் ஆகும். நமது ஆலயம் ஐம்பத்து ஒன்று அட்சரங்களை, ஐம்பத்து ஒன்று தெய்வங்களை உள்ளடக்கிய ஐம்பது ஒன்று பீடங்களைக் கொண்டதாகும். உருவ வழிபாடு இல்லாமல் ஒளி வழிபாடு கொண்ட திருக்கோவில் நம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள திருவிளக்கில் ஐந்து சுடர்கள் திருவுருவில் பஞ்சமூர்த்தி ரூபமாக இறைவன் நமக்கு அருள் பாலிக்கின்றான். மூலஸ்தானத்தில் இரண்டு பீடங்கள் அன்னை காமாட்சியும் அப்பன் ஏகம்பநாதணும் ஈஸ்வரன் ஈஸ்வரியாக அருள் கருணை புரிகின்றார்கள்.


உலகில் உள்ள ஹிந்துக் கோவில்கள் அனைத்திலும் இராஜகோபுரம் உள்ள தலைவாசல் கோவில் மூலஸ்தானத்தை நோக்கியே இருக்கும். முன் வாசலில் இருந்து பார்த்தால் மூலவர் திருவுருவம் நம் கண்ணில் படும். ஆனால் நம் கோவிலில் தலைவாசலில் இருந்து பார்த்தால் மூலஸ்தானம் தெரியாது. பூசாரி அய்யா உட்கார்ந்து இருக்கும் திருக்கோலம் தான் நம் கண்ணில் படும். காரணம், நமது குரு பூசாரி அய்யாவை நாம் காமட்சியாகவே நினைத்து வணங்குகின்றோம். பூசாரி அய்யா அவர்கள் இருப்பிடத்தில் அமர்ந்திருக்கும்போது நம் நாட்டின் பிரதமரே நம் கோவிலுக்கு வந்தாலும், பூசாரி அய்யா தன இருப்பிடத்தை விட்டு எழுந்து நின்று வணக்கம் கூறி வரவேற்க மாட்டார்கள். உட்கார்ந்த நிலையில் வாங்க அய்யா என்று தான் கூறுவார்.


தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக கர்மவீரர் காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் ஒருமுறை கீலஈரால் கிராமத்திற்கு வருகை தந்து நமது கோவிலுக்கு வந்தார்கள். அப்போதும் நம் கோவில் அய்யா தம் இருப்பிடத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்த நிலையில் வாங்க அய்யா என்றே வரவேற்றார்கள். நம் கோவில் பூசாரி அய்யா என்பது அரசர்களுக்கு எல்லாம் அரசர். தெய்வஅம்சம் பெற்றவர். பூசாரி அய்யா அவர்களின் கால்களை கூட நாம் தொடக் கூடாது. அவர் மேல் நம் கைப்படக் கூடாது. அவர் பாதங்களில் விழுந்து நாம் கும்பிட வேண்டும். நம் ஆலயத்தின் சுற்றுமதில்களுக்கு உட்பட்ட இடங்களில் பூசாரி அய்யவிடமே திருநீறு பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு எவரிடமும் மருள் ஆடிகளிடம் கூட திருநீறு பெற்றுக் கொள்ளகூடாது. பூசாரி அய்யா அவர்களின் திருப்பாதங்கள் தவிர யார் கால்களிலும் மருள் ஆடிகள் கால்களில் கூட வணங்கக் கூடாது.