கடைபிடிக்க வேண்டிய முறைகள்



நமது கோவிலில் நம் வீட்டு திருகல்யாண திருமண பத்திரிக்கை வைக்கும்போது நம் குழந்தைகளுக்கு நமது கோவிலில் மொட்டை போடும் போதும் நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன?


நம் வீட்டு திருமண விழா, புதுவீடு புகுவிழா, குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா போன்ற சுபகாரியங்களுக்கு பூசாரி அய்யா கலந்து கொண்டாலும் அங்கு உணவு உண்ண மாட்டார்கள். அன்று அவர் வீட்டில் அனைவரும் உண்ண நம் வீட்டு உணவாக அது அமைய அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், காய்கறி, வாழை இலை எல்லாம் நாம் கோவிலில் பத்திரிக்கை வைக்கும்போது நாம் வழங்கவேண்டும். மொட்டை காணிக்கையும் நாம் செலுத்த வேண்டும். நாடார் குல மக்களின் குலதெய்வ வழிபாட்டுக்கு கோவில்களில் நமது கோவில் தான் மிகப் பெரியது. வழிபாட்டு சிறப்புகள் கொண்டது.