அந்தாதி
கொடிய துன்பங்கள் நீங்க மனத் துயரங்கள் அகல
1. பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல்
மணோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்(சு) அமுதாக்கிய
அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி அந்தரி
பாதம் என் சென்னியதே
இல்வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் நிலவிட
2. ஆனந்தமாய் என் அறிவாய்
நிறைந்த அமுதமுமாய்
வானந்தமானி வடி(வு)டை
யாழ்மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணார
விந்தம் தவள நிற்க
கானந்தம் ஆடரங்ககாம் எம்பி
ரான் முடிக் கண்ணியதே
மக்கள் செல்வம் கிடைக்க ஆண் மகப்பேறு அடைய
3. ககனமும் வானும் புவனமும்
காணவிற் காமன் அங்கம்
தகனமும் செய்த தவப்பெரு
மாற்குத் தடக்கையும் செம்
முகனுமமுந் நான்கிரு மூன்றெனத்
தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி
நீ செய்த வல்லபமே
தீராத நோய் தீர
4. மணியே மணியின் ஒளியே
ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழ
கே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே
அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம
பாதம் பணிந்த பின்னே
கடன் தொல்லைகள் தீர
5. இல்லாமை சொல்லி ஒருவர் தம்
பால் சென்(று) இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவி
நேல்நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர தம்
பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே
வறுமை ஒழிய ஏழ்மை விலக
6. ஐயன் அளந்த படியிறு
நாளி கொண்(டு) அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும்
போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை
யுங்கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பாவைத் தாய் இது
வோ உன்றன் மெய்யருளே
கெட்ட எண்ணங்கள் உண்டாகதமலிருக்க
பிள்ளைகள் நல்லவர்களாக வளர
7. தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல
தெள்றுன் தவ நெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி
லேன் ஒற்றை நிள்சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலர் ஆகநின்
றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி
யார் பெற்ற பாலரையே
கணவன்-மனைவி உறவு நலமடைய
8. புண்ணியம் செய்தன மேமன
மேபுதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்
கூடிநம் காரணத்தால்
நண்ணிஇங் கேவந்து தம்படி
யார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல்பத்ம
பாதம் பதித்திடவே
இறையருள் கைகூட அம்பிகையின் அருள்பெற
9. நாயகி நான்முகி நாரா
யாணிகை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி
சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வராகி
சூலினி மாதங்கி என்(று)
ஆயகியாதி உடையாள்
சரணம் அரண் நமக்கே
சகல சௌபாக்கியங்களும் கிடைக்க
10. தனம் தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வறிய
மனம் தரும் தெய்வ வடிவுந்
தரும் நெஞ்சில் வஞ்சமில்ல
இனம் தரும் நல்லக எல்லாம்
தரும் அன்பர் என்பர்க்கே
கனந்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே
உயிர்களை கொல்லாதீர்கள் !
மாமிச உணவு உண்ணாதீர்கள் !