நேர்த்திக் கடன்கள்
நம் கோவிலில் கயிறு குத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவது எப்படி?
நம் கோவிலில் நீங்கள் சொல்லும் நேர்த்திக் கடன்களை ஆண்டுதோறும் மாசி திருவிழாவின் போது தான் நிரைவெற்ற முடியும். மகாசிவராத்திரி திருவிழா தொடங்கி ஆறாம் நாள் திருவிழா அன்று காலையில் கோவிலுக்கு சென்று நெல்லை குத்தி அரிசி ஆக்கவேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று பொங்கல் பொங்க வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் கோவிலில் வீட்டிலிருந்து சுவாமி புறப்படுவதற்கு முன்பே கயிறு குத்துபவர், அக்கினி சட்டி எடுப்பவர்கள் அங்கு செல்ல வேண்டும். அங்கு போய் அக்கினி சட்டி எடுப்பவரும், கயிறு குத்துபவர்களும் புத்தாடை உடுத்தி மஞ்சள் கலந்த தண்ணீரை தன் உடல் முழுவதும் ஊற்றிக் கொள்ளவேண்டும். அன்றைய திருநாள் அன்னை முத்துமாரியம்மனுக்கு உகந்த நாள் நம் நினைவெல்லாம் அன்னை காமாட்சி மீதும் மாரியம்மன் மீதும் இருக்க வேண்டும். நம் மனமும், உடலும் தூய்மையாக இருந்தால், நம் உடம்பில் அன்னை முத்துமாரியம்மன் அருள் இறங்கி திருவிளையாடல் புரிவாள். நம்மை ஆட்கொள்வாள். கயறு குத்துபவர்கள் பொங்கல் பொங்கும் போது தேங்காய் 3, பலம் 12, மாலை 3, எண்ணெய் 1 கிலோ, கற்பூரம், ஊதுபத்தி வாங்கி கொடுக்க வேண்டும். கயறு குத்துபவர்கள் மட்டும் செங்கிடா ஒன்று வாங்கவேண்டும். கயறு குத்தும் அன்று கோவில் வீட்டிலிருந்து சுவாமி கோவிலுக்கு வந்த உடன் கோவில் முதல் சுற்று பிரகாரத்தில் முன்புறம் செங்கிடா வெட்டப்படும்.