ஸ்ரீ துக்க நிவாரண அஷ்டகம்
(மஹிஷா ஷூர மர்த்தினி விருத்தம்)
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் கணிமுகங் கண்டநல் கற்பக காமினியே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
கானுறு மலரெனக் கதிர் ஒளிகாட்டி காத்திட வந்திடுவாள்
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றி சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து பொருந்திட வந்தவளே
எங்குலந் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்கையாளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
தண தண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கண கண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்
பண பண பம்பண பறையொலி கூவிட பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேலனைக் கொடுத்தநல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமரது செய்திடநற் சக்தியெனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
எண்ணியபடியே நீயருளிட வருவாய் எங்குல தேவியாளே
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளியதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
இடர்தரும் தொல்லை இனிமேல் இல்லையென்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமது தந்திடுவாய்
படர்தரும் இருளில் பரிதியாய் வந்து பழவிளை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி