பிள்ளையார் பொங்கல்
நம் கோவிலில் நாம் பிள்ளையார் பொங்கல் எப்போதெல்லாம் பொங்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை பிள்ளையார் பொங்கல் பொங்கலாம். குழந்தைச் செல்வம் கிடைத்த ஆண்டு; நம் பெண் மக்கள். ஆண் மக்களுக்கு திருமணம் ஆன ஆண்டு. வீடு, மனை வாங்கிய ஆண்டு பிள்ளையார் பொங்கல் பொங்க வேண்டும். பிள்ளையார் பொங்கல் மாசித்திருவிழாவின் போது பொங்கினால், மூன்று தேங்காய், எண்ணெய் 1 லிட்டர், கற்பூரம், ஊதுபத்தி, பன்னிரண்டு வாழைபழம், மூன்று மாலை வாங்கினால் போதும். மற்ற மாதங்களில் வெள்ளிகிழமை பொங்க வேண்டும். அப்போது நெல் 5 படி, தேங்காய் 35, வாழைபழம் 105, மாலை சிறியது 20, பெரியது 5, சாம்பிராணி, கற்பூரம், ஊதுபத்தி, பருத்திமார், கட்டு வாங்கிச் செல்லவேண்டும்.