வாங்க வேண்டிய பொருட்கள்



கோவிலுக்கு போகும்போது என்ன பொருள்கள் வாங்கி செல்ல வேண்டும்


மூலஸ்தானத்தில் உடைப்பதற்கு குறைந்தது மூன்று தேங்காய், பன்னிரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வாங்க வேண்டும். கீழ் வீட்டில் அருளாட்சி செய்யும் காத்தவராய சுவாமிக்கு உகந்த சிறப்பு எனும் வெற்றிலை கட்டு, பாக்கு, புகையிலை புனுகு, சவ்வாது போன்ற வாசனை திரவியங்கள் படைக்கவேண்டும். பதினெட்டாம்படி பார்த்திபன் பெரிய கருப்பசாமிக்கு உரிய ஒண்ணே கால் பணம் செலுத்தவேண்டும். கடையில் ஒண்ணே கால் பணம் என்று சொன்னால் வேண்டியது கொடுப்பார்கள். சிறப்பு வாங்கி வைத்தால் கீழ் வீட்டிலும் ஒண்ணே கால் பணம் வைத்தல் பதினெட்டாம்படி இருப்பிடத்திலும் பூசாரி அய்யா நமக்கு அருள்வாக்கு சொல்வார்கள்.